கூழாங்கற்கள் ஏற்றி வந்த லாரி பறிமுதல்


கூழாங்கற்கள் ஏற்றி வந்த லாரி பறிமுதல்
x

கூழாங்கற்கள் ஏற்றி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

அரியலூர்

மீன்சுருட்டி:

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும் மீன்சுருட்டி கடைவீதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு டிப்பர் லாரியை மறித்து சோதனை செய்தனர். இதில் அந்த லாரியில் அரசு அனுமதியின்றி கூழாங்கற்கள் ஏற்றி வந்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி, கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள இருளக்குறிச்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆனந்த்(வயது 30) என்பவரை கைது செய்தனர். மேலும் லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story