லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி


லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி
x
தினத்தந்தி 10 Oct 2022 12:15 AM IST (Updated: 10 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் லாரி-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.

கோயம்புத்தூர்

மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையம்-காரமடை சாலையில் சி.டி.சி. பணிமனைக்கு பின்புறம் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 52). டிரைவர். இவரது மகன் பார்த்தசாரதி (21). பால் வியாபாரி. இந்தநிலையில் நேற்று பார்த்தசாரதி வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் கல்லாறு பழப்பண்ணைக்கு சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். மேட்டுப்பாளையம்-ஊட்டி மெயின் ரோட்டில் வந்த போது, எதிரே வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் படுகாயம் அடைந்த பார்த்தசாரதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியில் பார்த்தசாரதி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் முருகநாதன், ஏட்டு யுவராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story