லாரி மோட்டார்சைக்கிள் மோதல்: தொழிலாளி சாவு
லாரி- மோட்டார் சைக்கிள் நேருக்கு ேநர் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார்
தேவதானப்பட்டி அருகே உள்ள ஜி. கல்லுப்பட்டியை சேர்ந்தவர் ராகவன் (வயது 42). கூலித்தொழிலாளி. அதே ஊரை சேர்ந்தவர் வீரகுமார். இவர்கள் இருவரும் தர்மலிங்கபுரத்திற்கு தென்னந்தோப்பில் தேங்காய் வெட்டுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். மோட்டார்சைக்கிளை ராகவன் ஓட்டினார்.
பெரியகுளம்-வத்தலக்குண்டு மெயின் ரோட்டில் தர்மலிங்கபுரம் அருகே வந்தபோது தேனியில் இருந்து மதுரை சென்ற டிப்பர் லாரி மோட்டார்சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் நிலை தவறி கீழே விழுந்ததில் ராகவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த வீரகுமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் லாரி டிரைவரான தேனியை சேர்ந்த பால்பாண்டி (32) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.