தாம்பரம் பகுதியில் குறைந்த விலைக்கு டீசல் தருவதாக லாரி உரிமையாளர்களிடம் நூதன மோசடி


தாம்பரம் பகுதியில் குறைந்த விலைக்கு டீசல் தருவதாக லாரி உரிமையாளர்களிடம் நூதன மோசடி
x

தாம்பரம் பகுதியில் குறைந்த விலைக்கு டீசல் தருவதாக கூறி லாரி உரிமையாளர்களிடம் நூதன முறையில் மோசடி செய்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை

சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை போன்ற பகுதியில் உள்ள லாரி உரிமையாளர்களை குறி வைத்து அவர்களின் ெசல்போன் எண்களுக்கு தொடர்பு கொள்ளும் மர்ம நபர்கள், தங்களிடம் டீசல் குறைந்த விலையில் உள்ளது. வாங்கிக் கொள்கிறீர்களா? என கேட்டனர்.

ேமலும் தற்போது ஒரு லிட்டர் டீசல் விலை 95 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில் தங்களிடம் ஒரு லிட்டர் டீசல் 50 ரூபாய்க்கு கிடைக்கும் எனவும், மொத்தமாக 100 லிட்டர், 120 லிட்டர் என வாங்கினால் பாதி விலைக்கு விற்பனை செய்வதாகவும், அதற்கான தொகையை முன்கூட்டியே ஆன்லைனில் செலுத்தும் படி கேட்டனர்.

சென்னையிலிருந்து லாரி மூலம் பெட்ரோல் பங்குகளுக்கு கொண்டு செல்லப்படும் பெட்ரோல், டீசல் லாரியில் இருந்து எடுக்கப்படும் டீசல் கேன்களில் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாகவும், அதைத்தான் தற்போது விற்பனை செய்கிறோம் எனவும் கூறினர்.

இதை நம்பிய லாரி உரிமையாளர்கள் மலிவு விலையில் டீசல் கிடைக்கிறது என எண்ணி 120 லிட்டர், 6000 ரூபாய் என ஆன்லைனில் பணத்தை செலுத்தி உள்ளனர். இதுபோல் பலரும் செலுத்திய நிலையில் உரிமையாளர்களுக்கு டீசல் வழங்காமல், செல்போன் இணைப்புகளை துண்டித்து விட்டு மர்ம நபர்கள் ஏமாற்றி சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இது சம்பந்தமாக லாரி உரிமையாளர்கள் அளித்த புகாரின்பேரில் சேலையூர் போலீசார் இந்த நூதன மோசடி குறித்து வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.


Next Story