மன்னார்குடியில் லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை பெற்று தராத மத்திய அரசை கண்டித்து மன்னார்குடியில் லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மன்னார்குடி:
தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை பெற்று தராத மத்திய அரசை கண்டித்து மன்னார்குடி வட்ட லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மன்னார்குடி தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் வி.ஐயப்பன் தலைமை தாங்கினார்.காவிரிநதி நீர் நடுவர் மன்ற தீர்ப்பின்படி காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், நடுநிலை தவறி நடக்கும் காவிரி மேலாண்மை ஆணையத்தை கண்டித்தும் காவிரி நீர் பிரச்சனையில் தமிழகத்திற்கு தொடர்ந்து துரோகம் செய்யும் மத்திய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. தமிழகத்திற்கு உரிய நீரை பெற்று தர கர்நாடக அரசும், மத்திய அரசும் மறுக்குமேயானால் மிகப்பெரிய உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர். இதில் சங்க செயலாளர் எம்.ராஜா, பொருளாளர் நீலகண்டன், துணைத் தலைவர் ராஜாராமன், துணைச் செயலாளர் தட்சிணாமூர்த்தி, சங்க ஆலோசகர் ஆர்.வி.ஆனந்த், நிர்வாகிகள் சந்திரசேகரன், ஏ.எஸ்.ஏ.அசோகன், சத்தியமூர்த்தி, எஸ்.செந்தில்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.