திம்பம் மலைப்பாதையில் லாரி பழுது; 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு


திம்பம் மலைப்பாதையில் லாரி பழுது; 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
x

மைசூர்க்கு மாட்டு தீவனம் பாரம் ஏற்றி சென்ற லாரி திம்பம் மலைப்பாதை 15 கொண்டை ஊசி வளைவில் பழுதாகி நின்றது.

ஈரோடு:

தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டைஊசி வளைவுகள் உள்ளன. இந்த மலைப்பாதை வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. தமிழகம் கர்நாடக இடையே முக்கிய போக்குவரத்தாக உள்ள இந்த பாதையில் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

இந்நிலையில் ஈரோட்டில் இருந்து கர்நாடகா மாநிலம் மைசூர்க்கு மாட்டு தீவனம் பாரம் ஏற்றி சென்ற லாரி இன்று காலை 9 மணியளவில் திம்பம் மலைப்பாதை 15 கொண்டை ஊசி வளைவில் பழுதாகி நின்றது. இதனால் வாகனங்கள் ஏதும் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வாகனங்கள் அணைத்து மலைப்பாதையில் அணிவகுத்து நின்றன. பண்ணாரியில் இருந்து கிரேன் வரவளைக்கப்பட்டு லாரி ஓரமாக எடுத்து நிறுத்தப்பட்டது.பின்னர் 12 மணியளவில் வாகனங்கள் சென்ற இதனால் திம்பம் மலைப்பாதையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

1 More update

Next Story