லாரிகள் நேருக்கு நேர் மோதல்; 3 பேர் படுகாயம்


லாரிகள் நேருக்கு நேர் மோதல்; 3 பேர் படுகாயம்
x

கோவை குறிச்சிகுளம் அருகே லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

கோயம்புத்தூர்

போத்தனூர்

கோவை செட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் மேகநாதன் (வயது 26), லாரி டிரைவர். நேற்று அதிகாலை இவர் தனது லாரியில் சுந்தராபுரத்தில் இருந்து உக்கடம் நோக்கி வந்து கொண்டிருந்தார். இவரது லாரியில் வடசித்தூரை சேர்ந்தவர் செந்தில்குமார் என்பவர் கிளீனராக இருந்தார்.

லாரி குறிச்சிகுளம் அருகே வந்தபோது எதிரே வந்த மற்றொரு டிப்பர் லாரியுடன் நேருக்கு நேர் மோதியது. இதில் டிப்பர் லாரி சாலையில் கவிழ்ந்து. இதில் லாரி டிரைவர் மேகநாதன், கிளீனர் செந்தில்குமார், டிப்பர் லாரியை ஓட்டி வந்த திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை சேர்ந்த கோவிந்தராஜ் (27) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், சாலையில் டிப்பர் லாரி கவிழ்ந்ததால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கிரேன் மூலம் 2 லாரிகளையும் அகற்றினர். இதையடுத்து போக்குவரத்து சீரானது. இந்த விபத்து தொடர்பாக கிழக்கு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story