வீட்டின் கதவை உடைத்து திருட முயற்சி


வீட்டின் கதவை உடைத்து திருட முயற்சி
x

வீட்டின் கதவை உடைத்து திருட முயன்ற நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருநெல்வேலி

நெல்லை அருகே கொங்கந்தான்பாறையில் மங்கையர்கரசிக்கு சொந்தமான வீடு உள்ளது. இவர் குடும்பத்துடன் வெளியூரில் வசிப்பதால், கொங்கந்தான்பாறையில் உள்ள வீட்டில் மங்கையர்கரசியின் தாயார், தம்பி ராம் சந்துரு (வயது 20) ஆகியோர் வசித்து வருகின்றனர். ராம் சந்துருவும், தாயாரும் வெளியூருக்கு சென்று விட்டு, நேற்று முன்தினம் காலையில் வீட்டுக்கு திரும்பி வந்தனர்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. ஆனால் வீட்டில் உள்ள பொருட்கள் எதுவும் திருட்டு போகவில்லை. எனினும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் கணினியின் ஹார்டு டிஸ்க் திருட்டு போனது தெரிய வந்தது.

வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர், வீட்டின் கதவை உடைத்து திருட முயன்றுள்ளார். ஆனால் அங்கு ெபாருட்கள் எதுவும் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார். எனினும் கண்காணிப்பு கேமராவில் தனது உருவம் பதிவாகி இருக்கும் என்பதால் அதனை மட்டும் மர்மநபர் திருடிச் சென்றுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில், முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story