ஒரு நாள் ஆகியும் பிரேத பரிசோதனை நடைபெறாததை கண்டித்து உறவினர்கள் சாலைமறியல் செய்ய முயற்சி.


ஒரு நாள் ஆகியும் பிரேத பரிசோதனை நடைபெறாததை கண்டித்து உறவினர்கள் சாலைமறியல் செய்ய முயற்சி.
x
தினத்தந்தி 25 July 2023 6:42 PM IST (Updated: 26 July 2023 1:14 PM IST)
t-max-icont-min-icon

ஒரு நாள் ஆகியும் பிரேத பரிசோதனை நடைபெறாததை கண்டித்து உறவினர்கள் சாலைமறியல் செய்ய முயற்சி.

திருப்பூர்

அவினாசி

அவினாசியை அடுத்துசெம்பியநல்லூரைச் சேர்ந்த சங்கர் மனைவி சரண்யா 25 இவர்கள் இருவருக்கும் திருமணமாகி எட்டு மாதங்கள் ஆகிறது. சரண்யா வக்கீலுக்கு படித்துள்ளார்.திருமணத்திற்கு பிறகு வேலைக்கு செல்ல வேண்டும் என்று சொல்லி வந்ததில் அவரதுகணவர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாகவும்இதனால் கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு கணவரை பிரிந்து சரண்யாதனது தாயார் வீட்டில் வசித்து வந்துள்ளார் இந்த நிலையில் மன வேதனையுடன் இருந்த சரண்யா வீட்டில் யாரும் இல்லாத போது நேற்று முன்தினம்தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் இது குறித்த அவினாசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

திருமணமாகி 8 மாதத்தில் பெண் தற்கொலை செய்துகொண்டது குறித்து ஆர்.டி.ஓ.விசாரனை நடத்த வேண்டும் என்பதால் அவினாசி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த பிரேதம் நேற்று பிற்பகல் வரை பிரேத பரிசோதனை நடைபெறவில்லை. இதனால் தற்கொலை செய்துகொண்ட பென்னின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் நேற்று காலை முதல் காத்திருந்தும் ஆர்டிஓ. வராததாது மற்றும் தற்கொலை செய்துகொண்ட சரன்யா தனது கணவர், மாமனார் மாமியார், கணவரின் தங்கை, அவரது கணவர் ஆகியோர தன்னை வரதட்சனை கேட்டுகொடுமைபடுத்தியதாகவும், தனது பெற்றோர் வீட்டிற்கு செல்ல தடை விதித்தாகவும், தனது உறுவத்தை பற்றி விமரிசித்து பேசியதாகவும் இதனால்தான் தற்கொலை செய்துகொண்டதாக அவர் கடிதம் எழுதிவைத்துள்ளதால் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை பிடித்து தக்க தண்டனை வழங்க வேண்டும் என்று கூறிசாலை மறியல் செய்ய முயன்றனர் தகவல் அறிந்து சப் கலெக்டர் ஜெய் நாரயணன், அவினாசி போலீஸ் டி.எஸ்பி பவுல்ராஜ், இன்ஸ்பெக்டர் ராஜவேல் ஆகியோர் அவினாசி அரசு மருத்துவமனைக்கு வந்து தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உறவினர்களிடம் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தி தற்கொலைக்காரணமாக இருந்தவர்களைகூடியவிரைவில் பிடித்து தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர் இதைடுயத்து பிரேத பரிசோதனை செய்து உடலை பெண்ணின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.. பின்னர்அவர்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அவினாசி பகுதியில் பரபரப்புஏற்பட்டது.

.


Next Story