சுடுகாட்டை ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி?


சுடுகாட்டை ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி?
x

குடியாத்தத்தில் சுடுகாட்டை ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி செய்வதாக அருந்ததியின மக்கள் மனு கொடுத்தனர்.

வேலூர்

குடியாத்தம்

குடியாத்தம் நகராட்சி 13-வது வார்டு பகுதியான குடியாத்தம்-காட்பாடி ரோடு ராஜிப்பட்டி பகுதியில் வசிக்கும் அருந்ததி இன மக்கள் கொண்டசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட வனத்துறை அலுவலகம் அருகே ராஜகோபால் நகரில் தனியார் நூற்பாலை பின்புறம் உள்ள இடத்தை சுடுகாடாக பயன்படுத்தி வந்தனர். இவர்கள் சுடுகாடாக பயன்படுத்தி வந்த இடத்தை சுற்றி வீடுகள் அமைந்ததால் அங்கு உடல்களை புதைக்க அந்தப்பகுதியில் வசிக்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து உடல்களை புதைக்க மாற்று இடம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்தநிலையில் அருந்ததி இன மக்கள் சுடுகாடாக பயன்படுத்திய இடத்தை அதன் அருகில் உள்ள தனியார் நூற்பாலையினர் தங்களுக்கு சொந்தமான இடம் என்று கூறி சுத்தம் செய்து வேலி அமைக்க முயன்றனர். இதனையடுத்து குடியாத்தம் நகராட்சி 13-வது வார்டு நகர்மன்ற உறுப்பினரும், புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட செயலாளருமான பி.மேகநாதன், ராமாலை ஒன்றியக் குழு உறுப்பினர் குட்டிவெங்கடேசன் உள்ளிட்டோர் அருந்ததி மக்களுடன் சென்று தனியார் நூற்பாலை ஊழியர்களிடம் இந்த இடம் அருந்ததியின மக்களுக்கு சுடுகாடாக பயன்படுத்த ஒதுக்கப்பட்ட இடம் என தெரிவித்தனர் இதனையடுத்து வேலி அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் குடியாத்தம் உதவி கலெக்டர் தனஞ்செயன், தாசில்தார் லலிதா ஆகியோரிடம் அந்த இடத்தில் வீட்டுமனைகள் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர். பிரச்சினைக்குரிய இடத்தில் ஒரிரு நாட்களில் வருவாய்த் துறை சார்பில் அளவீடு செய்து அந்த இடம் யாருக்கு சொந்தமானது என தெரிவிக்கப்படும் என வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.RE SUB-URBAN - GUDIYATHAM


Next Story