போலி வாரிசு சான்றிதழ் கொடுத்து ரெயில்வே வேலையில் சேர முயற்சி; 4 பேர் மீது வழக்கு


போலி வாரிசு சான்றிதழ் கொடுத்து ரெயில்வே வேலையில் சேர முயற்சி; 4 பேர் மீது வழக்கு
x

போலி வாரிசு சான்றிதழ் கொடுத்து ரெயில்வே வேலையில் சேர முயன்றது தொடர்பாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

திருச்சி

பொன்மலைப்பட்டி:

வேலை பெற முயற்சி

திருச்சி கொட்டப்பட்டு பகுதியை சேர்ந்தவர் செல்லதுரை. ரெயில்வே ஊழியரான இவர் கடந்த 2011-ம் ஆண்டு இறந்துவிட்டார். இவர் உயிருடன் இருக்கும்போதே இவரது முதல் மனைவி பழனியம்மாள் மற்றும் மகன்கள் ராஜா, சதீஷ்குமார், மகள் ராதா ஆகியோர், அவரை பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் சரோஜா என்பவரை செல்லதுரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். சரோஜாவுக்கு கதிர்வேல் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் திருச்சி பொன்மலை ரெயில்வேயில் கருணை அடிப்படையில் வேலை பெறுவதற்காக பழனியம்மாள், ராஜா, ராதா, சதீஷ்குமார் ஆகியோர், கதிர்வேலை சட்ட வாரிசாக காட்டாமல் மறைத்து மோசடி செய்து வாரிசு சான்றிதழ் பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் மோசடி செய்து வாங்கிய வாரிசு சான்றிதழை கொடுத்து ரெயில்வே வேலை பெறுவதற்கு முயற்சி செய்துள்ளனர்.

4 பேர் மீது வழக்கு

இதனை அறிந்த கதிர்வேல் மாநகர போலீஸ் கமிஷனர் மற்றும் பொன்மலை இன்ஸ்பெக்டர் ஆகியோரிடம் புகார் கொடுத்தார். அதன் மீது நடவடிக்கை எடுக்காததால் திருச்சி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதன் மீது கோர்ட்டு விசாரணை நடத்தி பழனியம்மாள், ராஜா, ராதா, சதீஷ்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த பொன்மலை போலீசாருக்கு உத்தரவிட்டது. அதன்பேரில் 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story