பிறந்த பச்சிளம் குழந்தை விற்க முயற்சி... மதுரை அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி


பிறந்த பச்சிளம் குழந்தை விற்க முயற்சி... மதுரை அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி
x

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிறந்த பச்சிளம் குழந்தையை விற்பனை செய்ய முயன்ற 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மதுரை,

மருத்துவமனை அருகே மூதாட்டி ஒருவர், கையில் பச்சிளம் குழந்தையுடன் நின்று கொண்டிருந்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அவரிடம் விசாரித்தனர். அப்போது, தனது மகள் அழகு பாண்டி அம்மாளின் குழந்தை என கூறியுள்ளார்.

அவரது மகளிடம் விசாரித்தபோது பொய் என்பது தெரியவந்தது. குழந்தை யாருடையது என்பது குறித்து போலீசார் விசாரித்து வரும் நிலையில், பச்சிளம் குழந்தையை விற்பனை செய்ய முயன்ற பாண்டியம்மாள், மாலதி உள்ளிட்ட 5 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.Next Story