பூக்கடை உரிமையாளர் வீட்டில் திருட முயற்சி
கடலூரில் பூக்கடை உரிமையாளர் வீட்டில் திருட்டு முயற்சி நடந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பாதிரிப்புலியூர், கடலூரில் பூக்கடை உரிமையாளர் வீட்டில் திருட்டு முயற்சி நடந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கடலூரில் பூக்கடை உரிமையாளர் வீட்டில் திருட்டு முயற்சி நடந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கடலூரில் பூக்கடை உரிமையாளர் வீட்டில் திருட்டு முயற்சி நடந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் கூத்தப்பாக்கத்தை சேர்ந்தவர் சசிக்குமார் (வயது 36). இவர் பூக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு தனது குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் வீட்டில் பீரோ உடைக்கப்படும் சத்தம் கேட்டு சசிக்குமாரின் மனைவி எழுந்துள்ளார். அப்போது மர்மநபர் வீட்டில் நின்றதை பார்த்த அவர் கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு சசிக்குமார் வருவதற்குள், மர்மநபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதுபற்றி தகவல் அறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது வீட்டின் பின்பக்க கதவை திறந்து வைத்து விட்டு தூங்கியதால் உள்ளே நுழைந்த மர்மநபர் பீரோவை உடைத்து திருட முயன்றுள்ளார். அப்போது சசிக்குமாரின் மனைவி எழுந்து கூச்சலிட்டதால், மர்மநபர் திருட்டு முயற்சியை கைவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.