அ.தி.மு.க. ஒரு அக்மார்க் சுயநலவாதியிடம் சிக்கி உள்ளது -பொதுக்குழுவில் டிடிவி தினகரன் பேச்சு


அ.தி.மு.க. ஒரு அக்மார்க் சுயநலவாதியிடம் சிக்கி உள்ளது -பொதுக்குழுவில் டிடிவி தினகரன் பேச்சு
x

அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்துவது என்று அக்கட்சியின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் துணை தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினர். இதில் 16 தீர்மானங்கள் நீரைவேற்றப்பட்டன. பொதுக்குழு கூட்டத்தில், அமமுகவுக்கு தலைவரை தேர்ந்தெடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் மேகதாது அணை கட்டுமான பணியை நிறுத்த ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்தி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பேரறிவாளனை போல மீதமுள்ள 6 தமிழர்களையும் விடுவிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அமமுகவில் சசிகலாவுக்காக தலைவர் பதவி காலியாக வைத்திருப்பதாக டிடிவி தினகரன் ஏற்கனவே கூறியிருந்தார். இந்நிலையில், சசிகலாவுக்கு என கூறப்பட்ட தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கபட்டு உள்ளது.

பொதுக்குழு கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன் கூறியதாவது:-

தேர்தல் வெற்றி தோல்வி என்னை பாதித்தது இல்லை. வருங்காலத்தைல் அமமுக தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சியை அமைக்கும். அதிமுகவின் தற்போதைய நிலை வருத்தமாக உள்ளது. பதவி வெறி, சுயநலம் கொண்டவர்களிடம் அ.தி.மு.க உள்ளது.

அ.தி.மு.க. ஒரு அக்மார்க் சுயநலவாதியிடம் சிக்கி உள்ளது. சொந்த கட்சியிலேயே பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களை காசு கொடுத்து வாங்கும் கேவலமான நிலையில் அ.தி.மு.க. உள்ளது.எடப்பாடி பழனிசாமிக்கு 90 சதவீத ஆதரவு உள்ளது என்றால் வாக்குப் பெட்டியை வைத்து தேர்தல் நடத்த வேண்டியது தானே.

அ.தி.மு.க.வில் வகித்த பதவிகளை தூக்கி எறிந்துவிட்டு என்னுடன் 5 ஆண்டுகளாக பயணித்துக் கொண்டிருப்பவர்கள் நீங்கள்;எதையும் எதிர்பார்க்காத தன்னலமற்ற படை நம்மிடம் உள்ளது, அங்கே இருப்பது கூலியை எதிர்பார்த்து வேலை செய்யும் கூட்டம்.தன் பதவியை பறித்துவிட்டார்கள் என்ற கோவத்தில் சென்றார் ஓ.பி.எஸ், பிற்காலத்தில் தன் தவறை உணர்ந்து மாறிவிட்டார் ஆனால் பழனிசாமி மேலும் மேலும் தவறு செய்தார். துரோகம் செய்து கொண்டே இருக்கிறார் என கூறினார்.


Next Story