நாடாளுமன்ற தேர்தலுக்காக டி.டி.வி.தினகரன் 5 இடங்களில் நிர்வாகிகளுடன் ஆலோசனை


நாடாளுமன்ற  தேர்தலுக்காக டி.டி.வி.தினகரன்  5 இடங்களில் நிர்வாகிகளுடன் ஆலோசனை
x

அ.ம.மு.க. சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் செயல்வீரர்கள்- வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் வருகிற ஜனவரி 3-ந்தேதி முதல் நடைபெற உள்ளது.

சென்னை,

அ.ம.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வருகிற நாடாளுமன்ற தேர்தல் மற்றும் அதனை தொடர்ந்து நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தல் பணிகளில் விரைந்து செயலாற்றிடும் வகையில், அ.ம.மு.க. சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் செயல்வீரர்கள்- வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் வருகிற ஜனவரி 3-ந்தேதி முதல் நடைபெற உள்ளது. இக்கூட்டங்களில் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பங்கேற்று ஆலோசனை வழங்குகிறார்.

இக்கூட்டத்தில் வருவாய் மாவட்டங்களுக்கு உள்பட்ட தலைமை கழக நிர்வாகிகள், கழக அமைப்பு செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள், மாநில, மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழகம் மற்றும் சார்பு அணிகளின் செயலாளர்கள், ஊராட்சி கழக செயலாளர்கள், கிளைக் கழக செயலாளர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொள்ள வேண்டும்.

ஜனவரி 3-ந்தேதி - வேலூர் டோல்கேட் ஆர்.என்.பங்ஷன் பேலஸ் திருமண மண்டபம் (ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்கள்).6-ந்தேதி - சென்னை அசோக்நகர் எம்.பி.கே. மகால் திருமண மண்டபம் (சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்கள்), 8-ந்தேதி - தருமபுரி வன்னியர் திருமண மகால் (தருமபுரி, கிருஷ்ணகிரி, மாவட்டங்கள்), 9-ந்தேதி - ஈரோடு பவானி மெயின் ரோடு ரவி மகால் (திருப்பூர், ஈரோடு மாவட்டங்கள்), 10-ந்தேதி - நாமக்கல் பரமத்தி ரோடு கொங்கு மண்டபம் (நாமக்கல், கரூர் மாவட்டங்கள்).பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகளை விரைந்து செயலாற்றிட அ.ம.மு.க. சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களாக கீழ்க்கண்டவர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

திருப்போரூர் - சி,கே.சுடுகாட்டான், எ.குரு என்கிற குருதாஸ், குமரகுரு.மதுராந்தகம்- புலவர் வி.தர்மலிங்கம், பாபு என்கிற வி.சீனிவாசன், இ.முனுசாமி.செய்யூர்- எட்டிப்பட்டு எம்.சந்தோஷ்குமார், என்.பி.கோபு, கே.சூர்யா.

இதேபோல் மயிலம், செஞ்சி, திண்டிவனம், விழுப்புரம், வானூர், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, ஈரோடு கிழக்கு, மொடக்குறிச்சி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story