டிடிவி.தினகரன் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ்...!


டிடிவி.தினகரன் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ்...!
x

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

சென்னை,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வயிற்றுவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த 2-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

உணவு ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்பட்ட அவர் நலமுடன் உள்ளதாகவும் பொது வார்டில் சிகிச்சைப் பெற்று வருகிறார் என்றும் இரண்டு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவர் பிரசன்னா தெரிவித்தார்.

இந்நிலையில், உணவு ஒவ்வாமை காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த டிடிவி.தினகரன் 4 நாட்களுக்கு பிறகு உடல்நலம் பெற்றதையடுத்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.


Next Story