காசநோய் விழிப்புணர்வு முகாம்
கோவில்பட்டி பள்ளியில் காசநோய் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி புனித ஓம் கான்வென்ட் பள்ளியில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் மற்றும் கீழஈரால் காசநோய் பிரிவின் சார்பாக காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைவர் லட்சுமண பெருமாள் தலைமை தாங்கினார். கீழஈரால் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் சரவணன் காசநோயின் அறிகுறிகள், பரவும் தன்மை பற்றி பேசினார். சுகாதார பார்வையாளர் சகாயராணி காசநோயாளிகளுக்கு அரசு வழங்கும் உதவித்தொகை பற்றியும், சிகிச்சை முறைகள் பற்றி எடுத்துக்கூறி, மாணவ, மாணவிகள் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார்.
நிகழ்ச்சியில் பள்ளி மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் கடம்பூர் காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் காசி விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பள்ளி முதல்வர் பொன்தங்கம் மகேஸ்வரி நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகமும், கீழஈரால் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் சரவணனும் இணைந்து செய்திருந்தனர்.