காசநோய் குறித்து விழிப்புணர்வு முகாம்


காசநோய் குறித்து விழிப்புணர்வு முகாம்
x

வெங்கலகுறிச்சி கிராமத்தில் காசநோய் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் அருகே உள்ள வெங்கலகுறிச்சி கிராமத்தில் கிராம சபை கூட்டத்தில் காசநோய் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.டி.செந்தில்குமார் முன்னிலை வகித்தார். ராமநாதபுரம் மாவட்ட காசநோய் துணை இயக்குனர் டாக்டர் ஜீவானந்தம் கலந்து கொண்டு காசநோய் குறித்து விழிப்புணர்வு அதன் அறிகுறிகள், மருத்துவ உதவி வழங்குவது குறித்து எடுத்துரைத்தார். மேலும் காச நோயாளிகளுக்கு அரசு வழங்கக்கூடிய உதவித்தொகை மற்றும் இலவச மருந்துகள் குறித்து விரிவாக விளக்கினார். இந்நிகழ்ச்சியில் காசநோய் மேற்பார்வையாளர் மோகன பாலன், ஒன்றிய கவுன்சிலர் கலைச்செல்வி ராஜசேகர் உள்பட அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக வெங்கல குறிச்சி ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு முன்பு குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.டி. செந்தில்குமார் தேசிய கொடி ஏற்றினார்.


Related Tags :
Next Story