காசநோய் விழிப்புணர்வு மணல் சிற்பம்

மேல்மிடாலம் கடற்கரையில் காசநோய் விழிப்புணர்வு மணல் சிற்பம்
கன்னியாகுமரி
கருங்கல்,
உலக காச நோய் தினத்தை முன்னிட்டு காச நோய் துணை இயக்குனர் டாக்டர் துரை அறிவுறுத்தலின்படி மேல் மிடாலம் கடற்கரையில் காச நோய் விழிப்புணர்வு மணல் சிற்பம் அமைக்கப்பட்டது, இதை, கிள்ளியூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராமா மாலினி திறந்து வைத்தார், இதில் கீழ் குளம் மருத்துவ அலுவலர் ஆனி, கிள்ளியூர் வட்டார அனைத்து மருத்துவ பணியாளர்கள் வழுதலம்பலம் தனியார் பள்ளி தாளாளர் அருட் தந்தை மரியவின்சென்ட், முதல்வர் யுஜின் ராஜ், பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர், நிகழ்ச்சியை வழுதலம்பலம் தனியார் பள்ளியுடன் இணைந்து கிள்ளியூர் வட்டார காச நோய் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் சந்திரசேகர், காச நோய் சுகாதார பார்வையாளர் ஆன்சி ரீஜா, மேரி சுனிதா, சுகாதார ஆய்வாளர் ஜோஸ் ஆகியோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story