காசநோய் விழிப்புணர்வு கருத்தரங்கு


காசநோய் விழிப்புணர்வு கருத்தரங்கு
x

வந்தவாசியில் காசநோய் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.

திருவண்ணாமலை

வந்தவாசி

வந்தவாசி அரசு மருத்துவமனையில் காசநோய் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. வந்தவாசி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் சிவப்பிரியா தலைமை தாங்கினார்.

வழூர் வட்டார மருத்துவ அலுவலர் ஆனந்தன் முன்னிலை வகித்தார். காசநோய் ஒழிப்பு வட்டார மேற்பார்வையாளர் அமித்பாஷா வரவேற்றார்.

காசநோய் குறித்தும், அதற்கான சிகிச்சை முறைகள் குறித்தும் மாவட்ட காசநோய் துணை இயக்குனர் அசோக் விளக்கி பேசினார்.

நிகழ்ச்சியில் வந்தவாசி அரசு மருத்துவமனை மற்றும் வழூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களைச் சேர்ந்த டாக்டர்கள், செவிலியர்கள் பங்கேற்றனர். முடிவில் டாக்டர் அக்மல் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story