காசநோய் கண்டறியும் முகாம்


காசநோய் கண்டறியும் முகாம்
x
தினத்தந்தி 20 Nov 2022 12:15 AM IST (Updated: 20 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

சீர்பனந்தல் கிராமத்தில் காசநோய் கண்டறியும் முகாம்

கள்ளக்குறிச்சி

ரிஷிவந்தியம்

ரிஷிவந்தியம் ஒன்றியம் சீர்பனந்தல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது. ரிஷிவந்தியம் மருத்துவ அலுவலர் தீபிகா மற்றும் டாக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் பரிசோதனை மேற்கொண்டனர். இதில் அதிநவீன டிஜிட்டல் எக்ஸ்ரே மூலம் சீர்பனந்தல் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த நோயாளிகள் 118 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து காசநோய், டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் முகாம் ஒருங்கிணைப்பாளர் இலியாஸ், மேற்பார்வையாளர் ரகு, அசோக், செந்தில்குமார், சுகாதார ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் ஏழுமலை, லட்சுமி, சரிதா, மக்களை தேடி மருத்துவ பணியாளர் ஆஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story