காசநோய் கண்டறிதல் முகாம்
காசநோய் கண்டறிதல் முகாம் நடந்தது.
கரூர்
புகழூர் நகராட்சி காந்தி மண்டபத்தில் பொதுமக்களுக்கு காசநோய் கண்டறிதல் குறித்த எக்ஸ்ரே பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமில் காச நோய் பிரிவு துணை இயக்குனர் டாக்டர் சரவணன் தலைமையில் மருத்துவ குழுவினர் முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு நுரையீரல், நெஞ்சு புகைப்படம் எடுத்து நுரையீரலில் சளி தொற்று உள்ளதா? என்றும் காச நோய் உள்ளதா? என்றும் எக்ஸ்ரே பரிசோதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு காசநோய் வராமல் இருப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பின்னர் முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு சர்க்கரை அளவு, ரத்த அழுத்த அளவு குறித்து பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story