காசநோய் கண்டுபிடிப்பு முகாம்


காசநோய் கண்டுபிடிப்பு முகாம்
x

காசநோய் கண்டுபிடிப்பு முகாம் நடந்தது

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டை அருகே கட்டளைக்குடியிருப்பு, பூலாங்குடியிருப்பு, தெற்கு மேடு ஆகிய கிராம பகுதிகளில் காசநோய் கண்டுபிடிப்பு நடமாடும் முகாம் நடந்தது. மருத்துவ பணியாளர்கள் வாகனம் மூலம் சென்று பொதுமக்களை சந்தித்து மருத்துவ விவரங்களை எடுத்து கூறினர். பின்பு காசநோய் அறிகுறிகள் இருந்தவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட நலக்கல்வியாளர் மாரிமுத்துசாமி காசநோயாளிகள் பின்பற்ற வேண்டிய நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நோயாளிகளுக்கு அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் பற்றி விளக்கி கூறினார். முகாமிற்கான ஏற்பாடுகளை மாவட்ட காசநோய் மைய மருத்துவர் சதீஷ்குமார், பிரபு, செந்தில் செய்திருந்தனர்.



Next Story