காசநோய் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம்


காசநோய் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம்
x

காவேரிப்பாக்கம் அருகே காசநோய் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

காவேரிப்பாக்கம் அருகே உள்ள உத்திரம்பட்டு கிராமத்தில் தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவத்தின் கீழ் காசநோய் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் சளி உள்ளிட்ட பல்வேறு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து காசநோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுக ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் காசநோய் உள்ளவர்கள் தொடர்ந்து 6 மாதம் வரை மாத்திரைகள் எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

எச்.ஐ.வி, எய்ட்ஸ் குறித்து ஆலோசனை வழங்கி, பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இந்த முகாமை உத்திரம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் தொடங்கி வைத்தார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் சயீப்புதின், வட்டார மருத்துவ அலுவலர் கவுரவ், ஐ.சி.டி.சி. ஆலோசகர் கோபி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story