கயிறு இழுக்கும் போட்டியில் பங்கேற்ற கலெக்டர்


கயிறு இழுக்கும் போட்டியில் பங்கேற்ற கலெக்டர்
x
தினத்தந்தி 13 Jan 2023 6:45 PM GMT (Updated: 13 Jan 2023 6:45 PM GMT)

வாணியங்குடி ஊராட்சியில் சமத்து பொங்கல் விழாவையொட்டி நடைபெற்ற கயிறு இழுக்கும் பேட்டியில் மாவட்ட கலெக்டர் கலந்து கொண்டு விளையாடினார்.

சிவகங்கை

வாணியங்குடி ஊராட்சியில் சமத்து பொங்கல் விழாவையொட்டி நடைபெற்ற கயிறு இழுக்கும் பேட்டியில் மாவட்ட கலெக்டர் கலந்து கொண்டு விளையாடினார்.

கயிறு இழுக்கும் போட்டி

சிவகங்கையை அடுத்த, வாணியங்குடி ஊராட்சியில் உள்ள சமத்துவபுரத்தில் சுகாதார பொங்கல் மற்றும் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. விழாவுக்கு ஊராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரி சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். இந்த விழாவில் மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி கலந்து கொண்டு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின்னர் சமத்துவ பொங்கல் உறுதிமொழியினை கலெக்டர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிகள், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் அனைவரும் ஏற்றனர்.

தொடர்ந்து பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளை கலெக்டர் தொடங்கி வைத்து கயிறு இழுக்கும் போட்டியில் பங்கேற்று விளையாடினார்.

பின்னர் கோலப்போட்டிகள், இளைஞர்களுக்கான பானை உடைத்தல்போட்டி, சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

சமத்துவ பொங்கல்

விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன், மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட அலுவலர் வானதி, இணை இயக்குனர் (தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம்) நாராயணன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ்குமார் உள்படபலர் கலந்து கொண்டனர்,

இதே போல் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், உடைகுளம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் வெள்ளைச்சாமி தலைமையில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவிலும் கலெக்டர் கலந்துகொண்டார்.


Next Story