மழை நீரில் ஒதுங்கிய ஆமைகள்


மழை நீரில் ஒதுங்கிய ஆமைகள்
x

பேரணாம்பட்டு பகுதியில் மழை நீரில் ஒதுங்கிய ஆமைகள் ஒதுங்கியது.

வேலூர்

பேரணாம்பட்டு

பேரணாம்பட்டு பகுதிகளிலும், ஆந்திரா மாநில வனப்பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பேரணாம்பட்டு அருகே உள்ள பத்தலப்பல்லி மலட்டாற்றிலும், ரங்கம்பேட்டை கானாற்றிலும், பேரணாம்பட்டு ஏரியிலும் நீர்வரத்து தொடங்கி உள்ளது. பேரணாம்பட்டு ஏரிப்பகுதியையொட்டி அமைந்துள்ள திருநாவுக்கரசு என்பவரின் வீட்டுப்பகுதியில் மழை நீரில் அடித்து வரப்பட்ட 2 ஆமைகளும், பேரணாம்பட்டு தீயணைப்பு நிலையம் பகுதியில் தேங்கிய மழை நீரில் ஒரு ஆமையும் ஒதுங்கின.

இது குறித்து தகவலறிந்த பேரணாம்பட்டு வனவர் தயாளன், வனகாப்பாளர் பிரபா, வன காவலர் ரவி ஆகியோர் சென்று ஆமைகளை மீட்டு மாவட்ட வன அலுவலர் பிரின்ஸ் குமார் உத்தரவின் பேரில் பேரணாம்பட்டு அருகே கோட்டையூர் கிராமத்தில் வனத்துறைக்கு சொந்தமான ஏரியில் விட்டனர்.

1 More update

Related Tags :
Next Story