தூத்துக்குடி, கன்னியாகுமரி அணிகள் வெற்றி


தூத்துக்குடி, கன்னியாகுமரி அணிகள் வெற்றி
x

திசையன்விளையில் நடந்த அகில இந்திய கபடி போட்டியில் தூத்துக்குடி, கன்னியாகுமரி அணிகள் வெற்றி பெற்றன.

திருநெல்வேலி

திசையன்விளை:

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 69-வது பிறந்த நாளையொட்டி, நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் ஏற்பாட்டில், திசையன்விளை வி.எஸ்.ஆர். விளையாட்டு மைதானத்தில் அகில இந்திய மின்னொளி கபடி போட்டி கடந்த 11-ந் தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் இரவில் 2-வது நாளாக நடந்த ஆண்கள் பிரிவுகளுக்கான போட்டிகளை அப்துல் வகாப் எம்.எல்.ஏ., நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ, பாளையங்கோட்டை ஒன்றிய தி.மு.க. செயலாளரும், யூனியன் துணைத்தலைவருமான தங்கபாண்டியன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பரமசிவ அய்யப்பன் ஆகியோர் வீரர்களை அறிமுகம் செய்து தொடங்கி வைத்தனர்.

பெண்கள் பிரிவுகளுக்கான போட்டிகளை முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், ராதாபுரம் யூனியன் தலைவர் சவுமியா ஜெகதீஷ், திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கமலாநேரு சுயம்புராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பெண்கள் பிரிவில் முதலாவது போட்டியில் சி.பி.ஆர். அணியை சென்னை மாநகர போலீஸ் அணி வீழ்த்தியது. 2-வது போட்டியில் மதுரை அமெரிக்கன் கல்லூரி அணியை குஜராத் வருவாய்த்துறை அணி வென்றது. 3-வது போட்டியில் கேரள அணியை ராஜஸ்தான் அணி வீழ்த்தியது. 4-வது போட்டியில் ஒட்டன்சத்திரம் அணியை கேரளா செயின்ட் மேரிஸ் அணி வென்றது. 5-வது போட்டியில் சாத்ரா அணியை தானே அணி வீழ்த்தியது. 6-வது போட்டியில் சாணக்கிய அணியை நாக்பூர் அணி வென்றது.

ஆண்கள் பிரிவில் முதலாவது போட்டியில் கூடங்குளம் அணியை டெல்லி சி.ஆர்.பி.எப். அணி வென்றது. 2-வது போட்டியில் ராஜஸ்தான் அணியை தூத்துக்குடி துரைசிங்கம் அணி வீழ்த்தியது. 3-வது போட்டியில் கரூர் ஜெயகணபதி அணியை எதிர்நீச்சல் அணி வீழ்த்தியது. 4-வது போட்டியில் நாக்பூர் அணியை கன்னியாகுமரி அளந்தான்கரை அணி வென்றது. 5-வது போட்டியில் ஐதராபாத் சவுத் சென்டிரல் ரெயில்வே அணியை மராட்டிய அணி வீழ்த்தியது. 6-வது போட்டியில் டெல்டா வடுவூர் அணியை சென்னை வருமான வரித்துறை அணி வென்றது.

ராதாபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜோசப் பெல்சி, அப்புவிளை முன்னாள் பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.சுரேஷ், வி.எஸ்.ஆர்.சுபாஷ், ராதாபுரம் ஊராட்சிமன்ற கூட்டமைப்பு தலைவர் அனிதா பிரின்ஸ், முன்னாள் லயன்ஸ் கவர்னர் சுயம்புராஜன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் முரளி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



Next Story