தென்கொரியா நிறுவனத்துடன் தூத்துக்குடி நாசரேத் திருமண்டல கல்லூரிகள் புரிந்துணர்வு ஒப்பந்தம்


தென்கொரியா நிறுவனத்துடன் தூத்துக்குடி நாசரேத் திருமண்டல கல்லூரிகள் புரிந்துணர்வு ஒப்பந்தம்
x
தினத்தந்தி 8 Sep 2023 6:45 PM GMT (Updated: 8 Sep 2023 6:46 PM GMT)

தென்கொரியா நிறுவனத்துடன் தூத்துக்குடி நாசரேத் திருமண்டல கல்லூரிகள் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

தூத்துக்குடி

சாயர்புரம்:

தென் கொரியாவை சேர்ந்த ஐ. என். சி. ஹெச். இ. நிறுவனத்துடன் தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்துக்கு உட்பட்ட சாயர்புரம் போப் கல்லூரி நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி, ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரி ஆகியவற்றுக்கு இடையே புரிந்துணர்வ ஒப்பந்தம் நிகழ்ச்சி சாயர்புரம் போப் கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருமண்டல துணைத் தலைவர் தமிழ்ச்செல்வன் ஆரம்ப ஜெபம்செய்தார். கல்லூரி முதல்வர்(பொறுப்பு) செல்வகுமார் வரவேற்றார். திருமண்டல மாடரேட்டர் திமோத்ரவீந்தர் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் தென்கொரியா ஐ.என்.சி.ஹெச்.இ.நிறுவன இயக்குனர் கிம், மண்டல ஒருங்கிணைப்பாளர் டேனியல் எழிலரசு, போப் கல்லூரி தாளாளர் நிகர் பிரின்ஸ் கிப்ஸன், நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி செயலாளர் பிரேம்குமார்ராஜா சிங், ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரி முதல்வர் ஜெயக்குமார் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் ரூபன், மர்காஷியஸ் கல்லூரி முதல்வர் ஜவஹர் சாமுவேல் ஆகியோர் நன்றி கூறினர். இந்த நிகழ்ச்சியில் சாயர்புரம் போப் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் ஜோன்ஸ் ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story