தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில்வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்


தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில்வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்
x
தினத்தந்தி 24 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-25T00:17:17+05:30)

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் புதன்கிழமை நடக்கிறது என்று மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இந்தி திணிப்பின் போது தமிழ் மொழிக்காக நடந்த போராட்டங்களில் உயிர் தியாகம் செய்த மொழி போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒவ்வெரு ஆண்டும் ஜனவரி 25-ந் தேதி மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாளாக அனுசரிக்கப்பட்டு வருகின்றது. அதன் படி தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. மாணவரணி சார்பில் இன்று (புதன்கிழமை) மாலையில் தூத்துக்குடி டூவிபுரம் 5-வது தெரு மெயின் ரோடு, அண்ணா நகர் 7-வது தெரு சந்திப்பு பகுதியில் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நடக்கிறது.

இந்த பொதுக்கூட்டங்களில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, மாநகரபகுதி, நகர, பேரூராட்சி, மாநகர வட்ட வார்டு, கிளைக் கழக நிர்வாகிகள், மற்றும் கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு அமைப்பு பிரதிநிதிகள், கழக தொண்டர்கள், மகளிர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story