தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க.வினர் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு


தூத்துக்குடி தெற்கு மாவட்ட  அ.தி.மு.க.வினர் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு
x
தினத்தந்தி 26 Oct 2022 12:15 AM IST (Updated: 26 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க.வினர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர்.

தூத்துக்குடி

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியை சேலத்தில் உள்ள அவரது இல்லத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் நேரில் சந்தித்து மலர் கொத்து வழங்கி தீபாவளி வாழ்த்துகள் தெரிவித்தார்.

அப்போது, மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், ஆழ்வார்திருநகரி ஒன்றிய செயலாளர் ஆழ்வார்திருநகரி விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


Next Story