டி.வி., மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது


டி.வி., மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது
x

டி.வி., மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

கரூர்

சின்னதாராபுரம் அருகே உள்ள ராஜபுரம் பிரிவு சாலையை சேர்ந்தவர் நாச்சிமுத்து (வயது 72). இவர் சம்பவத்தன்று வீட்டின் அருகில் உள்ள கடைக்குச் சென்றுள்ளார். மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் வெளியே இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் வீட்டின் உள்ளே இருந்த டி.வியையும் காணவில்லையாம்.

இந்தநிலையில் சின்னதாராபுரம் போலீசார் ராஜபுரம் பிரிவு சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படி வந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் சின்னதாராபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஏசுதாஸ் (32) என்பதும், அவர் நாச்சிமுத்து வீட்டில் இருந்து டி.வி. மற்றும் மோட்டார் சைக்கிளை திருடி வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து ஏசுதாசை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story