இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாள் விழா
களக்காட்டில் இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாள் விழா கொண்டாப்பட்டது.
களக்காடு:
களக்காட்டில் புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதைமுன்னிட்டு அவரது உருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு, மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. மாவட்ட செயலாளர் நெல்சன் தலைமை தாங்கினார். தலைவர் முகமது காஸிர், மகளிரணி செயலாளர் ரேணுகா, இளைஞரணி செயலாளர் நம்பித்துரை, களக்காடு ஒன்றிய செயலாளர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன், களக்காடு நகராட்சி தலைவர் சாந்தி சுபாஷ், அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஒன்றிய செயலாளர் ராஜசேகர், தமிழர் உரிமை மீட்பு களம் ஒருங்கிணைப்பாளர் லெனின் கென்னடி, பூலித்தேவர் மக்கள் முன்னேற்ற கழகம் நிறுவனத்தலைவர் பவானி வேல்முருகன், நேதாஜி சுபாஷ் சேனையின் தென்மண்டல இளைஞரணி செயலாளர் சுகுணா கணேசன், தமிழ்ப்புலிகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் தமிழரசு, அம்பைராஜ், திராவிட தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் திருக்குமரன், காங்கிரஸ் களக்காடு வட்டார தலைவர் பிராங்கிளின், களக்காடு வட்டார தாழ்த்தப்பட்டோர் சீர்த்திருத்த சங்க தலைவர் சுகுமாரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி களக்காடு ஒன்றிய செயலாளர் முருகன், அகில இந்திய காமராஜர் பேரவை தலைவர் துரை நாடார், விடுதலை சிறுத்தைகள் கட்சி களக்காடு ஒன்றிய செயலாளர் சுந்தர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதில் புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இன்பரசு, வள்ளியூர் ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், ராதாபுரம் ஒன்றிய செயலாளர் மிக்கேல்ராஜ், களக்காடு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் முத்து பாஸ்கர், இளைஞரணி செயலாளர் பாலாஜி, மகளிரணி செயலாளர் கனகராணி, நகர மகளிரணி செயலாளர் நாகரத்தின், இளைஞரணி அமைப்பாளர் ராஜேஷ், இளைஞரணி செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் முருகன் நன்றி கூறினார்.