பிளஸ்-2 பொதுத்தேர்வில் 530 மதிப்பெண் எடுத்த இரட்டையர்கள்
பிளஸ்-2 பொதுத்தேர்வில் இரட்டையர்கள் 530 மதிப்பெண் எடுத்தனர்.
வடவள்ளி
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவு வெளியானது.
இதில் கோவையை சேர்ந்த இரட் டையர்கள் வெவ்வேறு பாடப்பிரிவில் படித்த போதும் ஒரே மாதிரியான மதிப்பெண் எடுத்து உள்ளனர். இது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
கோவை வடவள்ளி தொண்டாமுத்தூர் ரோடு வேம்பு அவன்யூ வை சேர்ந்தவர் சுவாமிநாதன். இவருடைய மனைவி ஜெயசுதா. இவர்களுக்கு நிரஞ்சன், நிவேதா என இரட்டை குழந்தைகள் உள்ளனர்.
அவர்கள் வடவள்ளி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்தனர்.
இதில் நிரஞ்சன் கணினி அறிவியல், நிவேதா வணிக கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளில் படித்தனர்.
ஆனால் அவர்கள் 2 பேரும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் சொல்லி வைத்தது போல் ஒரே மாதிரி யாக 600-க்கு 530 மதிப்பெண்கள் எடுத்தனர்.
அவர்கள் 2 பேரும் சிறு வயது முதல் பல்வேறு விஷயங்களில் ஒற்றுமையாக இருந்துள்ளனர். தற்போது பிளஸ்-2 மதிப்பெண் ணும் ஒரே மாதிரி எடுத்து இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதில் நிவேதா தமிழ்-82, ஆங்கிலம்-80, பொருளாதாரம் -96, வணிகவியல்- 89, கணக்கியல்-95, வணிக கணிதம்-88 மதிப்பெண் எடுத்தார்.
இது போல் நிரஞ்சன் தமிழ்-87, ஆங்கிலம்-84, இயற்பியல்-87, வேதியியல்-89, கணினி அறிவியல்-96, கணக்கு-87 மதிப்பெண் எடுத்தார். இரட்டையர்களான நிரஞ்சன், நிவேதா ஒரே மாதிரியான மதிப்பெண் எடுத்தது பெற்றோர் மற்றும் நண்பர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.