மது விற்ற மூதாட்டி உள்பட 2 பேர் கைது


மது விற்ற மூதாட்டி உள்பட 2 பேர் கைது
x

மது விற்ற மூதாட்டி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

தோகைமலை அருகே கள்ளை பகுதியில் ேபாலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த பெத்தாயி (வயது 65) என்பவர் தனது பெட்டிக்கடையில் வைத்து மது விற்று கொண்டிருந்தார். இதையடுத்து அவரை தோகைமலை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன. குளித்தலை அருகே உள்ள வாளாந்தூர் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் அந்த பகுதியில் தனது வீட்டின் பின்புறம் வைத்து மது விற்ற செந்தில்குமார் (51) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து விற்பனைக்காக இருந்த 6 மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story