எட்டயபுரம் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது


எட்டயபுரம் அருகே கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

எட்டயபுரம் அருகே கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 85 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

போலீசார் கண்காணிப்பு

எட்டயபுரம் பகுதியில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து நேற்று முன்தினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர் முகமது, சப்-இன்ஸ்பெக்டர் முத்துவிஜயன் மற்றும் போலீசார் எட்டயபுரம் அருகே மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த 2 பேர் போலீசாரை பார்த்தவுடன் அந்த பகுதியில் வேகமாக தப்பி செல்ல முயன்றனர். அந்த 2 பேரையும் போலீசார் மடக்கிப் பிடித்து விசாரித்தனர்.

2 பேர் கைது

விசாரணையில், அவர்கள் எட்டயபுரம் உமறுப்புலவர் தெருவை சேர்ந்த இமாம் அலி மகன் ஷேக் (வயது 26), எட்டயபுரம் வடக்கு தெருவை சேர்ந்த ராமசாமி மகன் முத்து கருப்பசாமி(56) எனவும், அந்த பகுதியில் 2 பேரும் கஞ்சா விற்று வந்ததும் தெரிய வந்தது. அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 85 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 2 பேரையும் கைது செய்தனர்.


Next Story