மூதாட்டியிடம் 13 பவுன் நகையை வழிப்பறி செய்த 2 பேர் கைது


மூதாட்டியிடம் 13 பவுன் நகையை வழிப்பறி செய்த 2 பேர் கைது
x

மோட்டார் சைக்கிளில் வந்து மூதாட்டியிடம் 13 பவுன் நகையை வழிப்பறி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்

கோயம்புத்தூர்

கணபதி

கோவை கணபதியை அடுத்த அத்திப்பாளையம் பிரிவு பாலாஜி நகரை சேர்ந்தவர் ரகுராம். இவருடையமனைவி ராணி (வயது 60). இவர், கடந்த ஏப்ரல் 18-ந் தேதி நடை பயிற்சி சென்று கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென்று ராணியின் கழுத்தில் கிடந்த 13 சவரன் தங்கச் சங்கிலியை பறித்து விட்டு தப்பி சென்றனர்.

இது குறித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வழிப்பறி கொள்ளையர்களை பிடிக்க கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர் அருண் மேற்பார்வையில் சரவணம்பட்டி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார், மற்றும் போலீசார் ராஜேந்திரன், நந்தகுமார், செந்தில்குமார், தினேஷ் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

அவர்கள், சம்பவ இடத்தில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து வழிப்பறி கொள்ளையர்களைதேடி வந்தனர்.

இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி, கோவை குறிச்சி இட்டேரி பிரிவை சேர்ந்த முகமது மசூத் என்பவரது மகன் ஹை௫ல்லா (27), சுந்தராபுரம் ராமானுஜம் நாயுடு வீதியைச் சேர்ந்த சரவணன் என்பவரின் மகன் சக்தி வசந்த் (23) ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.

இதில் ராணியிடம் அவர்கள், வழிப்பறி செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story