கூடலூரில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது


கூடலூரில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது
x

கூடலூரில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

நீலகிரி

கூடலூர்

கூடலூர் நந்தட்டி பகுதியைச் சேர்ந்தவர் சரண்ராஜ். இவர் கடந்த ஏப்ரல் மாதம் 23-ந் தேதி தனது மோட்டார் சைக்கிளை அதே பகுதியில் நிறுத்தி வைத்திருந்தார். ஆனால் அதை யாரோ திருடிச் சென்று விட்டனர். இதுகுறித்து கூடலூர் போலீஸ் நிலையத்தில் சரண்ராஜ் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து கூடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் உள்ளிட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கூடலூர் நகரில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகப்படும்படி நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் சரண்ராஜ் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மேப்பாடி பகுதியைச் சேர்ந்த அக் ஷய பாபு (வயது 21), அக் ஷய் (20) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து கூடலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story