மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் பலி
கணியம்பாடி அருகே மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
அடுக்கம்பாறை
கணியம்பாடி அருகே மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
மோட்டார்சைக்கிள்கள் மோதல்
வேலூர் மாவட்டம் கணியம்பாடி அருகே நஞ்சுகொண்டபுரம், கொள்ளைமேடு பகுதியை சேர்ந்தவர் முனிவேலு என்பவரின் மகன் விஜய் (வயது 23). இவர் நேற்று முன்தினம் இரவு மோட்டார்சைக்கிளில் கணியம்பாடி சென்றுவிட்டு, மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
கனிகனியான் கிராமம் அருகே வந்தபோது, எதிரில் வந்த கல்பட்டு அருகே தட்டான்குளம் கிராமத்தை சேர்ந்த உதயகுமார் என்பவரின் மோட்டார்சைக்கிளும், விஜய் சென்ற மோட்டார்சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது.
2 பேர் பலி
இந்த விபத்தில் 2 பேரும் பலத்த காயமடைந்தனர். உடனடியாக அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே விஜய் மற்றும் உதயகுமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து வேலூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.