கோவில் திருவிழாவில் இரு தரப்பினர் மோதல்


கோவில் திருவிழாவில் இரு தரப்பினர் மோதல்
x

வடமதுரை அருகே கோவில் திருவிழாவில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.

திண்டுக்கல்

வடமதுரை அருகே உள்ள குருந்தம்பட்டி பூசாரிபட்டியில் பெரியகாண்டி அம்மன், வீரமரத்து கருப்பசாமி, ஆண்டிச்சாமி ஆகிய கோவில்கள் உள்ளது. இந்த ேகாவிலில் ஒரு தரப்பினர் சார்பில் திருவிழா நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று 200-க்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு வழிபாடு நடந்தது. திருவிழாவிற்கு ஆடுகளுடன் மற்றொரு தரப்பினர் வந்தனர். அப்போது ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரை வரக்கூடாது என தடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு துர்காதேவி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஒரு தரப்பினர் திருவிழா முடிந்து ஒரு வாரம் கழித்து மற்றொரு தரப்பினர் கோவிலுக்கு வரலாம். அதுவரை எதிர் தரப்பினருக்கு அனுமதியில்லை என கூறினர். இதையடுத்து மற்றொரு தரப்பினர் அங்கிருந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story