சிறுமியை கர்ப்பமாக்கிய வழக்கில் சிறுவன் உள்பட 2 பேர் கைது


சிறுமியை கர்ப்பமாக்கிய வழக்கில் சிறுவன் உள்பட 2 பேர் கைது
x

சிறுமியை கர்ப்பமாக்கிய வழக்கில் சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு முடித்து தற்போது பிளஸ்-1 சேர்ந்துள்ள 16 வயதுடைய சிறுவன், தனது பக்கத்து வீட்டில் வசித்து வருபவரும், பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் போது, ஒரே வகுப்பில் பயின்ற 15 வயதுடைய சிறுமியுடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது அச்சிறுமி 6 மாத கர்ப்பமாக உள்ளார். சிறுமியின் கர்ப்பத்துக்கு காரணமாக கூறப்படும் அந்த சிறுவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சிறுமியின் தாய் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அந்த சிறுவனை தேடி வந்தனர். மேலும் சிறுமியிடம் போலீசார் நேற்று விசாரணை நடத்தினர். விசாரணையில், 25 வயதுடைய வாலிபர் ஒருவரும் அச்சிறுமியிடம் தவறான முறையில் நடந்து கொண்டது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அந்த சிறுவனையும், வாலிபரையும் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.


Next Story