வியாபாரி உள்பட 2 பேர் தற்கொலை
வியாபாரி உள்பட 2 பேர் தற்கொலை
கோவை
கோவை ஆர்.எஸ்.புரம் கவுலி பிரவுன் சாலையை சேர்ந்தவர் முகேஷ் (வயது 57). இவர் ஊட்டி பஸ் நிலையம் அருகே மேட்டுப்பாளையம் சாலையில் 20 ஆண்டுகளாக டைல்ஸ் கடை நடத்தி வந்தார். இந்நிலையில், சில நாட்களாக கடை திறக்கப்பட வில்லை. வீட்டில் இருந்த முகேஷ் நேற்று திடீரென தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், கடையில் அவர் எதிர்பார்த்த அளவுக்கு வருமானம் இல்லை. இதனால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் அவரால் வாங்கிய கடனை அடைக்க முடியவில்லை. இதன் காரணமாக அவர் மன உளைச்சலில் தற்கொலை செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (39). இவர் அங்குள்ள மார்பிள் கடையில் டிரைவர் வேலைக்கு சென்று வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். குடிப்பழக்கம் உடைய பன்னீர் செல்வம் தனக்கு தெரிந்தவர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் கடன் வாங்கியிருந்தார். ஆனால் அந்த கடனை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் மன உளைச்சலில் வாழ்க்கையில் விரக்தியடைந்த பன்னீர் செல்வம் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
----
Reporter : M.ABULKALAMAZATH_Staff Reporter Location : Coimbatore - Coimbatore