பள்ளி மாணவர்கள் பயங்கர மோதல்


பள்ளி மாணவர்கள் பயங்கர மோதல்
x

பள்ளி மாணவர்கள் பயங்கர மோதல்

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூர் மத்திய பஸ் நிலையத்துக்குள் சினிமாவை மிஞ்சும் சம்பவம் ேபால் பள்ளி மாணவர்கள் மோதிக்கொண்டனர். அப்போது அங்கிருந்த பயணிகள்அவர்களை பிடிக்க முன்றபோது அவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

மத்திய பஸ் நிலையம்

திருப்பூர் மத்திய பஸ் நிலையத்துக்கு தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கிறார்கள். மாநகரின் இதயப்பகுதியில் அமைந்துள்ளதால் டவுன் பஸ்கள் இங்கிருந்து இயக்கப்படுகிறது. இதன்காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள் காலை, மாலை நேரத்தில் அதிகம் கூடும் இடமாக உள்ளது.

குறிப்பாக மத்திய பஸ் நிலையம் பகுதியை சுற்றி மாநகராட்சி ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இதனால் மாணவ-மாணவிகள் பஸ் நிலையத்துக்கு வந்து வீடுகளுக்கு செல்வது வழக்கம். இவ்வாறு வரும் பள்ளி மாணவர்களுக்கு இடையே சினிமாவை போல், அவ்வப்போது மோதல் ஏற்பட்டு ஒருவரையொருவர் ரத்தம் வரும் வரை தாக்கிவிட்டு தப்பி செல்லும் சம்பவங்கள் நடந்து வருகிறது.

மாணவனின் மூக்கு உடைந்தது

இந்தநிலையில் நேற்று மாலை பள்ளி மாணவர்கள் பஸ் நிலையத்துக்கு வந்தனர். திருப்பூர் காதர்பேட்டையில் உள்ள மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கும், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் இடையே திடீரென்று வாக்குவாதம் முற்றி மோதலாக மாறியது. மாணவர்கள் கும்பல் சேர்ந்து கொண்டு இரு தரப்பினரும் மாறி, மாறி தாக்கிக்கொண்டனர். சினிமாவை போல் ஓடி, ஓடி துரத்திச்சென்று தாக்கிக்கொண்டனர். அங்கிருந்த பயணிகள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இந்த தாக்குதலில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவனின் மூக்கு உடைந்தது.

இதைப்பார்த்த அங்கிருந்த பயணிகள் மாணவர்களை தடுக்க முயன்றனர். தாக்கியவர்களை பிடிப்பதற்குள் அனைவரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். மூக்கில் ரத்த காயமடைந்த மாணவனை பயணிகள் மீட்டு தெற்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அந்த மாணவனுக்கு அறிவுரை கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

கூடுதல் போலீசார்

மத்திய பஸ் நிலையத்தில் இதுபோன்ற பள்ளி மாணவர்கள் மோதலை தவிர்க்க காலை, மாலை நேரத்தில் போலீசார் கூடுதலாக நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story