வெடி மருந்துடன் கைதான இலங்கை தமிழர்கள் 2 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை


வெடி மருந்துடன் கைதான இலங்கை தமிழர்கள் 2 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை
x

வெடி மருந்துடன் கைதான இலங்கை தமிழர்கள் 2 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியிள்ளயுது.

பூந்தமல்லி,

சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் பஸ் நிலையம் அருகே 2019-ம் ஆண்டு வெடிமருந்து பொருட்களுடன் நின்ற இலங்கை தமிழர்களான ஜேசு ராஜா என்ற ராஜேந்திரன், கணேசன் ஆகியோரை சங்கர்நகர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள வெடிகுண்டு வழக்குகள் விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. கடந்த சனிக்கிழமை இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளவழகன், குற்றம் சாட்டப்பட்ட இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கினார். மேலும் இருவருக்கும் தண்டனை விவரத்தை திங்கட்கிழமை (அதாவது நேற்று) அறிவிப்பதாக தெரிவித்து இருந்தார்.

அதன்படி இலங்கை தமிழர்கள் 2 பேருக்கான தண்டனை விவரத்தை நேற்று நீதிபதி இளவழகன் அறிவித்தார். அதில் குற்றம் சாட்டப்பட்ட ராஜேந்திரன் மற்றும் கணேசன் இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 4 ஆண்டுகள் 3 மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் விஜயராஜ் ஆஜரானார்.


Next Story