ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க இரு மாநில அதிகாரிகள் ஆலோசனை
கேரள மாநிலம் வாளையாறில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க இருமாநில அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
வாளையாறு
கோவை வழியாக கேரள மாநிலம் பாலக்காட்டிற்கு ரேஷன் அரிசி கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
எனவே கோவை வழியாக கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க குடிமைப்பொருள் வழங்கல் குற்றபுலனாய்வு துறை டி.ஜி.பி. அபாஷ்குமார், கலெக்டர் சமீரன், போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி ஆகியோர் உத்தரவுப்படி கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள வாளையாறில்
இதற்கு பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், மேனகா, சப்- இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் ஆகியோர் தலைமை தாங்கினார்.
இதில் இரு மாநில போலீசார் மற்றும் வட்ட வழங்கல் அதிகாரிகள் ஒத்துழைப்புடன் ரேஷன் அரிசி கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது, இரு மாநில அதிகாரிகளும் செல் போன் எண்களை பரிமாறி கொண்டு தகவலை ஒருவருக்கொரு வர் தெரிவிப்பது, ரேஷன் அரிசி விற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதில் தமிழ்நாடு, கேரளாவை சேர்ந்த சிவில் சப்ளை அதிகாரிகள் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.