போதைப் பொருள் தீமை குறித்து இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பிரசாரம்..!


போதைப் பொருள் தீமை குறித்து இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பிரசாரம்..!
x

சர்வதேச போதை பொருள் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்கிறார்.

திருவள்ளூர்


சென்னை ஷெனாய் நகரைச் சேர்ந்தவர் டி.ஆறுமுகம். இவர் இந்திய சமூக சேவை சங்கம் அமைப்பு கடந்த 2015ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறார்.தற்போது இளைஞர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு மக்களையும், சீரழித்து வரும் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.

சென்னையில் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் வீட்டில் இருந்து போதை விழிப்புணர்வு பிரசாரத்தை துவக்கிய ஆறுமுகம் நேற்று திருவள்ளூர் வந்தடைந்தார்.

இவர் பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையம், ரயில் நிலையம், தேரடி, பஜார் வீதி உள்ளிட்ட பகுதிகளில் போதை பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதுகுறித்து ஆறுமுகம் கூறியதாவது:

கடந்த மார்ச், 2020 - 2022 வரை, இந்தியா முழுதும், மூன்று முறை, இருசக்கர வாகனத்தில், 'கொரோனா' விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டேன். வரும் 26ம் தேதி சர்வதேச போதை பொருள் விழிப்புணர்வு தினம் வருகிறது. இதற்காக, தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு இருசக்கர வாகனத்தில் பிரசாரம் மேற்கொண்டுள்ளேன் இவ்வாறு அவர் கூறினார்

இந்த விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ், திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ., வி.ஜி.ராஜேந்திரன், திருவள்ளூர் நகர மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன் ஆகியோர் பார்வையிட்டு ஆறுமுகத்திற்கு வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story