தீத்தடுப்பு குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம்


தீத்தடுப்பு குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம்
x

தீத்தடுப்பு குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

திருச்சி

மும்பை துறைமுகத்தில் 1944-ம் ஆண்டு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கப்பலில் வெடிபொருட்கள் வெடித்து சிதறியதால் ஏற்பட்ட தீ விபத்தில் 66 தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களின் நினைவாக ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 14-ந் தேதி தீத்தொண்டு நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் அந்தவாரம் முழுவதும் தீத்தடுப்பு குறித்து பொதுமக்களிடம் தீயணைப்புத்துறை சார்பில் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று திருச்சியில் தீயணைப்புவீரர்கள் பங்கேற்ற இருசக்கரவாகன விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. கோர்ட்டு அருகே தொடங்கிய இந்த ஊர்வலத்தை மாவட்ட தீயணைப்பு அலுவலர் அனுசியா கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிலைய அலுவலர்கள் மனோகர், சத்தியவர்த்தனன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஊர்வலம் ஒத்தக்கடை, தலைமை தபால்நிலையம், ரெயில்வே ஜங்ஷன், மத்திய பஸ் நிலையம், வ.உ.சி.சாலை வழியாக சென்று நிறைவடைந்தது. ஊர்வலத்தின்போது, பொதுமக்களிடம் தீ விபத்தில் இருந்து பாதுகாத்து கொள்வது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வினியோகிக்கப்பட்டன.


Related Tags :
Next Story