ரூ.2 லட்சத்துடன் இருசக்கர வாகனம் திருட்டு
ரூ.2 லட்சத்துடன் இருசக்கர வாகனம் திருட்டு
கருமத்தம்பட்டி
கருமத்தம்பட்டி அருகே உள்ள செலம்பராயன்பாளையத்தை சேர்ந்தவர் ரவிக்குமார்(வயது 62). விசைத்தறி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று அருகில் உள்ள ஒரு வங்கி கிளைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். பின்னர் தனது கணக்கில் இருந்து ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்தார். அதை ஒரு பையில் போட்டு இருசக்கர வாகனத்தில் வைத்துக்கொண்டு கருமத்தம்பட்டி-அன்னூர் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். பின்னர் ராயர்பாளையம் பகுதியில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு டீ குடிக்க சென்றார். இதையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது, பணத்துடன் இருசக்கர வாகனம் திருடு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது தட்டாம்புதூர் பகுதியில் அந்த இருசக்கர வாகனம் நிற்பது தெரியவந்தது. ஆனால் அதில் பணம் இல்லை. இருசக்கர வாகனத்தை மீட்ட போலீசார், பணத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.