விவசாயியை கத்தியால் குத்தியவருக்கு 2 ஆண்டுகள் சிறை


விவசாயியை கத்தியால் குத்தியவருக்கு 2 ஆண்டுகள் சிறை
x

சுவாமிமலை அருகே விவசாயியை கத்தியால் குத்தியவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கும்பகோணம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

தஞ்சாவூர்

கபிஸ்தலம்;

சுவாமிமலை அருகே விவசாயியை கத்தியால் குத்தியவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கும்பகோணம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

கத்திக்குத்து

தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அருகே உள்ள சுந்தரபெருமாள் கோவில் கவுண்டர் தெருவில் வசிப்பவர் துரைராஜ்(வயது58). விவசாயி. இவருக்கும் அதே சுந்தர பெருமாள் கோவில் மேட்டுத்தெரு பகுதியில் வசிக்கும் அறிவழகன்(52) என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது. இந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு முன்விரோதம் காரணமாக அறிவழகன் விவசாயி துரைராஜை கத்தியால் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த துரைராஜ் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

2 ஆண்டுகள் சிறை

இதுகுறித்து துரைராஜ் கொடுத்த புகாரின் பேரில் சுவாமிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து அறிவழகனை கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு விசாரணை கும்பகோணம் கோாட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் துரைராஜை கத்தியால் குத்திய அறிவழகனுக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பாரதிதாசன் தீா்ப்பு கூறினார்.


Next Story