கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

வாலிபர் கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

தஞ்சாவூர்


வாலிபர் கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

சரமாரியாக வெட்டி கொலை

தஞ்சை பள்ளியக்கிரஹாரம் சின்னத்தெருவை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மகன் பிரேம் (வயது30). நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஏற்கனவே காவலாளியாக பணிபுரிந்து வந்தவர். இவர் கடந்த செப்டம்பர் மாதம் 18-ந் தேதி அம்மன்பேட்டை பைபாஸ் சாலை அருகே வயல்வெளிக்கு மத்தியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை அருகே நின்று கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த மனக்கரம்பை பகுதியை சேர்ந்த விஸ்வபிரசாத், பள்ளியக்கிரஹாரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் மற்றும் சிலர் அரிவாளால் பிரேமை முகத்திலும், தலையிலும் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.

2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

இதுகுறித்து நடுக்காவேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விஸ்வபிரசாத், மணிகண்டன் மேலும் சிலரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா். இவர்களில் மணிகண்டன், விஸ்வபிரசாத் ஆகிய 2 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா பரிந்துரை செய்தார்.அதன்பேரில் மணிகண்டன், விஸ்வபிரசாத் ஆகிய 2 பேர் மீதும் மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன் படி 2 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்த உத்தரவு நகலை திருவையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் வழங்கினார்.


Next Story