தூத்துக்குடி அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது


தூத்துக்குடி அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி:

தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஆனந்த தாண்டவம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, வேப்பலோடை காட்டுப்பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டு இருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் வேப்பலோடையைச் சேரந்த ராஜ் மகன் முனிய செல்வம் (24) மற்றும் தருவைக்குளம் பகுதியை சேர்ந்த 19 வயது வாலிபர் என்பதும் தெரியவந்தது. அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 200 கிராம் கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தருவைகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story